இந்து கடவுள் பிரம்மாவை பின்பற்றி தனது மகளையே முதியவர் ஒருவர் திருமணம் செய்ததாக வைரலான வீடியோ போலியானது என தெரியவந்துள்ளது.
புதுடெல்லி சில நாட்களுக்கு முன்பு இந்துக் கடவுள் பிரம்மாவை பின்பற்றி தனது மகளை 62 வயது முதியவர் ஒருவர் திருமணம் செய்து கொண்டதாக வீடியோ ஒன்று வைரலானது.
இந்த வீடியோவில் முதியவரும், இளம் பெண்ணும் மாலையுடன் இருக்கும் காட்சிகள் இடம் பெற்று இருந்தது.
இந்த வீடியோவை முதலில் டிரோல் என்ற டுவிட்டர் கணக்கில் கடந்த டிசம்பவர் 25ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. மேலும் டெக்பரேஷ் (Techparesh) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிசம்பர் 17ம் தேதி இதே வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.
அதேபோல் பரேஷ் சதாலியா (Paresh Sathaliya) என்ற யூடியூப் பக்கத்திலும் இந்த வீடியோ உள்ளது.
அதுமட்டுமல்லாது டெக்பரேஷ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளம் பெண்ணை முதியவர் திருமணம் செய்வதுபோல், மூதாட்டி ஒருவர் இளைஞரைத் திருமணம் செய்துபோன்ற வீடியோவும், இரண்டு பெண்கள் ஒரு ஆணை திருமணம் செய்வது போன்ற வீடியோவும் உள்ளது.
இப்படி திருமணம் தொடர்பான வீடியோக்கள் இந்தப்பக்கத்தில் அதிகம் உள்ளது.தற்போது பரப்பக்கூடிய வீடியோவில் இருக்கும் பெண் வேறொரு வீடியோவில் இருப்பதைக் காண முடிகிறது.
அதில் இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொள்வதாகப் பதிவிடப்பட்டுள்ளது. Also Read – ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை…! இது வீடியோக்களை வைரல் செய்வதற்காகத் திட்டமிட்டு எடுக்கப்படும் ஸ்கிரிப்ட் வீடியோக்கள் என அறிய முடிகிறது.
இந்நிலையில்தான் தனது மகளையே முதியவர் ஒருவர் திருமணம் செய்வதுபோன்று இருக்கும் வீடியோ திட்டமிட்டு வைரல் செய்யப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.
இதன்மூலம் தனது மகளையே முதியவர் திருமணம் செய்வதாக வைரலாகும் வீடியோ போலியானது, இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்பதும் நமக்குத் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.