படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் படத்தை எதிர்பார்ப்பது போல் படத்தின் டிரெய்லரையும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடிப்பில் வெளியாக உள்ள வாரிசு படத்தின் டிரெய்லர் இன்று வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
பீஸ்ட் படத்திற்கு பிறகு தளபதி விஜய் நடிப்பில் தயாராகியுள்ள படம் வாரிசு. பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியுள்ள இந்த படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார்.
ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் குஷ்பு, சரத்குமார், யோகிபாபு, ஷாம், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.
தமன் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழாவும் நடந்தது.
அதனைத் தொடர்ந்து நாள்தோறும் வாரிசு படத்தின் அப்டேட்கள் வெளியாகி வருகிறது. இதனிடையே பொங்கல் தினத்தை முன்னிட்டு வாரிசு படம் ஜனவரி 12-ந் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் வாரிசு படத்தின் டிரெய்லர் ஜனவரி 4-ந் தேதி (இன்று) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் படத்தை எதிர்பார்ப்பது போல் படத்தின் டிரெய்லரையும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.
அதே சமயம் துணிவு டிரெய்லர் விஜயின் முந்தைய படமான பீஸ்ட் மாதிரி உள்ளது என்று சிலர் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், வாரிசு டிரெய்லர் எப்படி இருக்கும் என்பதை பார்க்க அஜித் ரசிகர்களும் ஆவல் காட்டி வருகின்றனர்.
இந்த நிகழ்வு தற்போது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வாரிசு படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும், படத்தின் மொத்த ரன்னிங் டைம் 2.50 மணி நேரம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் படத்தின் டிரெய்லர் 2 நிமிடம் 30 வினாடிகள் இருக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது,
இதனிடையே வாரிசு படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கூட்டுக்குடும்பத்திற்கு வரும் சிக்கல் அதை குடும்பத்தின் கடைசி மகன் எப்படி தீர்த்து வைத்தார் என்பதே கதை என்று ட்ரெய்லர் மூலம் தெரியவந்துள்ளது. படத்தில் வில்லன் ரோலில் பிரகாஷ்ராஜ், விஜய் அப்பாவாக சரத்குமார் நடித்துள்ளனர்.
இதுவரை வெளியான டிரெய்லர்களில் பீஸ்ட் மட்டும் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ள நிலையில், இந்த சாதனையை வாரிசு படத்தை டிரெய்லர் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் வாரிசு ஃபேலிமி சம்பந்தமாக கதை என்பதால் இந்த டிரெய்லர் ஃபேலிமி ரசிகர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளாக அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த டிரெய்லரை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், தங்களது கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஒரு ரசிகர், எவ்வளவு அடிப்பட்டாலும், கஷ்டப்பட்டாலும் அதே இடத்தில் அசைக்க முடியாத சக்தியாக உருவாக வேண்டும் என்று நமக்கு உணர்த்திய ” Vijay Sir ” படத்திற்கு உழைத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் … * என்று கூறியுள்ளார்.
மற்றொ ரசிகர் வசன உச்சரிப்பு “உன் ஆட்கள் அதிகமா இருக்கலாம் அனைவரும் ரசிப்பது”தளபதி ” யை மட்டுமே என கூறியுள்ளார்.
நாட்டாமை ,சூரிய வம்சம், வானத்தைப்போல வரிசையில் உங்கள் வாரிசு என்று மற்றொரு ரசிகர் கூறியுள்ளார்.
அண்ணாதே போல் இந்த படமும் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்க வாழ்த்துகள் என்று கூறியுள்ளர்.
மேலும் ரசிகர்கள் பலரும் படம் பெரிய வெற்றிப்படமாக மாற வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் தற்போதுவரை வாரிசு டிரெய்லர் வெளியாகி 2 மணி நேரத்தில் 5.2 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ள நிலையில். 1.1 மில்லியன் லைக்ஸ் குவித்துள்ளது. இதில் ஒரு டிஸ்லைக் கூட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.