வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்கள் எதிர்நோக்கியுள்ள தேசியப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நலம் விசாரிக்கச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடல்களை நடத்தி, சுமுகமான தீர்வை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இரா.சம்பந்தனிடம் உறுதியளித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் உடல் நலம் விசாரிப்பதற்காக  அவரது வீட்டிற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று விஜயம் செய்துள்ளார்.

இதன்போதே, இரா.சம்பந்தன்  மேற்படி கோரிக்கையை மஹிந்த ராஜபக்ஷவிடம் விடுத்துள்ளார்.

இதேவேளை, தமிழர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மூன்று நாள் சர்வகட்சி மாநாட்டில், தமது கட்சியான பொதுஜன பெரமுனவும் கலந்துகொள்ளும் என மஹிந்த ராஜபக்ஷ இதன்போது கூறியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version