கெங்கல்ல – அம்பகொட்டே, தெல்தெனிய பிரதேசத்தில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில், குறித்த சிறுமியை கண்டுப்பிடிக்க உதவுமாறு பொலிஸார் பொதுமக்களை கோரியுள்ளனர்.

குறித்த சிறுமி 2022 ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி முதல் காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தினத்தில் பாடசாலைக்கு சென்ற சிறுமி வீடு திரும்பாத நிலையில் சிறுமியின் உறவினர்கள் தெல்தெனிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த தினத்தில் சிறுமி பாடசாலைக்கு செல்லாமல் கண்டியிலிருந்து கொழும்புக்கு புகையிரதத்தில் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன சிறுமி தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை எனவும், சிறுமியைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவி தேவை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுமி தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெல்தெனிய பொலிஸ் நிலையம் – 081 237 4073

தெல்தெனிய தலைமையக பொலிஸ் பரிசோதகர் – 071 859 1066 (R)

Share.
Leave A Reply

Exit mobile version