பெங்களூருவில் உள்ள கோவிலில் இருந்து பெண் ஒருவரின் தலைமுடியைப் பிடித்து வெளியே இழுத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்தச் சம்பவம் கடந்த டிசம்பர் 21ஆம் தேதியன்று நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்தப் பெண் பல நாட்களுக்குப் பிறகு காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

அமிர்தஹள்ளியில் அமைந்துள்ள ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோவிலின் பிரதான சிலைக்கு அருகே அமர விரும்பியதாகப் பாதிக்கப்பட்ட பெண் குறித்துக் கூறப்பட்டு வருகிறது.

கோவில் வளாகத்தைவிட்டு வெளியே செல்லுமாறு கூறியபோது, அவர் வெளியில் செல்லவில்லை எனவும் கூறப்படுகிறது.

பல முறை கோரிக்கை விடுத்தும் பெண் கோயிலை விட்டு வெளியே வராததால், முனிகிருஷ்ணா (கோவில் அதிகாரி) அவர்களை வெளியே இழுத்துச் சென்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒரு போலீஸ் அதிகாரி  பெயர் தெரிவிக்க வேண்டாமென்ற நிலையில் பேசியபோது, “முதல் கட்ட விசாரணையில் அந்தப் பெண்ணின் மனநிலை சரியில்லை என்றும் கோவிலுக்கு வெளியே செல்ல மறுத்துவிட்டார் என்றும் தெரிய வந்துள்ளது” எனக் கூறினார்.

இதுகுறித்து பேசிய வடகிழக்கு பெங்களூரு டிஜிபி அனூப் ஷெட்டி, “ஐபிசியின் 354, 323, 324, 504, 506, 509 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம்,” என்றார்.

காவல்துறையின் கூற்றுப்படி, தான் பட்டியல் சாதியைச் சேர்ந்தவரா இல்லையா என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலையும் அந்தப் பெண் தெரிவிக்கவில்லை.

Share.
Leave A Reply

Exit mobile version