மனைவி கோபமாக இருப்பதால் தனக்கு விடுமுறை வேண்டும் என்று காவலர் ஒருவர் விடுப்பு கடிதம் எழுதி இருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

கடிதத்தை படித்த காவல்துறை துணை கண்காணிப்பாளர், காவலருக்கு 10 நாட்கள் விடுப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

உத்தர பிரதேசம் மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நவ்ரங்கா காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவருக்கு கடந்த மாதம் திருமணம் நடந்துள்ளது.

திருமணம் முடிந்த உடன் விடுமுறை கிடைக்காததால் அவர் பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில், மனைவி கோபமாக இருக்கிறாள். பேச மாட்டேங்குறாள்… என்பதை கூறி விடுமுறை தாருங்கள் என காவலர் உயர் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

காவலர், காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘விடுமுறை கிடைக்காததால் எனது மனைவி கோபத்துடன் இருக்கிறார்.

போன் செய்யும்போது மனைவி பேசவில்லை. பலமுறை மனைவிக்கு போன் செய்தேன் ஆனால் அவர் என்னுடைய தாயிடம் போனை கொடுத்து விடுகிறார்’ என கூறியுள்ளார்.

மேலும், தனது மருமகனின் பிறந்தநாள் அன்று வீட்டிற்கு வருவேன் என்று மனைவியிடம் கூறியதாகவும் விடுமுறை தரவில்லை என்றால் வீட்டிற்கு செல்ல முடியாது என்றும் கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த கடிதத்தை படித்த காவல்துறை துணை கண்காணிப்பாளர், காவலருக்கு 10 நாட்கள் விடுப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version