8ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியொருவருக்கு 47 வயதான ஆசிரியர் ஒருவர் காதல் கடிதம் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம், உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் நகரில் உள்ள பாடசாலையொன்றில்
அக்கடிதத்தில் ” இதனைப் படித்ததும் கிழித்து விட வேண்டும்,யாருக்கும் காட்டக் கூடாது, விடுமுறை நாட்களில் உன்னை மிஸ் செய்வேன் , விடுமுறை வருவதற்குள் என்னை வந்து சந்தித்து விடு” இவ்வாறு எழுதப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அச்சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ள நிலையில்,பெற்றோர் தனது மகளிடம் மன்னிப்பு கேட்குமாறு கோரியுள்ளனர்.
எனினும் இதற்கு மறுப்புத் தெரிவித்த ஆசிரியர் சிறுமியை இருக்கும் இடம் தெரியாமல் செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தமையை அடுத்து, குறித்த ஆசிரியர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.