வீட்டில் பதுங்கியிருந்த வேளை STF அதிரடி
பொத்துவில் விஹாரை ஒன்றுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் கலசம் ஒன்றை 100 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற இருவரை நேற்று (11) பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் அப்பகுதியில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்தபோது விசேட அதிரடிப்படை யினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கலசம் விசேட கல்லினால் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் அதன் பின்பகுதியில் விலைமதிப்பற்ற கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
கலசத்தின் இருபுறமும் வெண்கல புத்தர் சிலை மற்றும் நீலக்கல் பதிக்கப்பட்டுள்ளதாகவும் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் மட்டக்களப்பு பிரதேசத்தையும் மற்றைய நபர் வெயங்கொட பிரதேசத்தையும் சேர்ந்தவர்களாவர்.