யாழ்ப்பாணத்தில் தம்பதியினர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் 10 நாட்களின் பின்னர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் இருபாலை மடத்தடி பகுதியில் உள்ள வீடொன்றினுள் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த கணவன் மற்றும் மனைவி மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தாக்குதலாளி தலைமறைவாகி இருந்தார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னடுத்து வந்த நிலையில்,  முல்லைத்தீவு வலைப்பாடு பகுதியில் சந்தேகநபர் பதுங்கி இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபரின் வீட்டில் உள்ள கோழிக் கூட்டுக்குள் இருந்து தாக்குதலுக்கு பயன்படுத்திய வாளினை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version