தனது சிறு வயதில் வயது முதிர்ந்த பெண்ணொருவரிடம் தனது கன்னித்தன்மையை இழந்ததாக பிரித்தானியாவின் இளவரசர் ஹாரி தெரிவித்துள்ளார்.
இளவரசர் ஹாரி அண்மையில் தனது நினைவுக் குறிப்புகளை ஸ்பேர் என்ற தலைப்பில் சுயசரிதை புத்தகமொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த புத்தகத்தில் 17ஆவது வயதில் தனது கன்னித்தன்மையை வயது முதிர்ந்த பெண் ஒருவரிடம் இழந்ததாகவும், கொகைன் போதைப் பொருளை பலமுறை பயன்படுத்தி வந்ததாகவும், குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாது ஆப்கானிஸ்தானில் இராணுவ சேவையாற்றியபோது 25 தலிபான்களைச் சுட்டுக் கொன்றதாகவும், தலிபான்களை தான் மனிதர்களாகப் பார்க்கவில்லை என்றும், அகற்றப்பட வேண்டிய சதுரங்கக் காய்களாகவே அவர்களைக் கருதியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.