அமெரிக்காவில், பொலிஸ் நிலையமொன்றில் 7 அதிகாரிகளோடு, பெண் பொலிஸ் அதிகாரியொருவர் உல்லாசமாக இருந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டென்னசியில் உள்ள குறித்த பொலிஸ் நிலையத்தில், திருமணமான பெண்பொலிஸ் அதிகாரியொருவர், சக பொலிஸ் அதிகாரிகளோடு நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் உயர் அதிகாரிகளுக்குத் தெரிய வந்த நிலையில், இது குறித்து அவர்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு பலமுறை எச்சரித்தும், அவர்கள் இதனைப் பொருட்படுத்த வில்லை எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையில், இவர்கள் உல்லாசமாக இருக்கும் புகைப்படங்கள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம் இவ்விவகாரம் காரணமாக குறித்த பெண் பொலிஸ் அதிகாரியின் கணவர், அவருடன் உடலுறவு கொள்ள மறுத்துள்ளதாகவும், விவாகரத்து கோருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் அனைவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் எனவும், அவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version