யாழ்ப்பாணம் – மிருசுவில் தவசிகுளம் கண்ணகை அம்மன் கோயிலில் இருந்த பாம்பை நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திருட்டு சம்பவம் (14) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
கண்ணகை அம்மன் கோயில் அடியார்கள் நீண்ட காலமாக நாகபாம்பு ஒன்றை பால் ஊற்றி வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று மாலை வேளையில் கோயில் முன்றலில் குரங்குடன் வந்த நபரொருவர், சிறுவர்களுக்கு குரங்கு ஆட்டம் காட்டியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து மகுடி வாசித்துள்ளார். மகுடி சத்தம் கேட்ட பாம்பு கோயில் முன் பகுதிக்கு வந்துள்ளது.
அதன்போதே குறித்த நபர் பெட்டிக்குள் பாம்பை அடைத்து கொண்டு சென்றுள்ளார் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.