தொடர்ச்சியான ஹெரோயின் போதைப் பாவனைக்கு அடிமையாகியிருந்த ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் கொடிகாமம், வரணி இயற்றாலையைச் சேர்ந்த 37 வயதுடைய குடும்பத்தலைவரே உயிரிழந்தவராவார். இவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார்.

போதைப் பொருள் குற்றச்சாட்டில் கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி இவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்டார். கடந்த 10ஆம் திகதி இவர் வயிற்று வலி காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி  இவர் நேற்றிரவு உயிரிழந்தார் என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.

தொடர்ச்சியான ஹெரோயின் பாவனையே இவரது உயிரிழப்புக்குக் காரணம் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

Share.
Leave A Reply

Exit mobile version