ஆசிரியர் மன ரீதியாக துன்புறுத்தியதால் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த கொண்டார்.

லாத்தூர், ஆசிரியர் மன ரீதியாக துன்புறுத்தியதால் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த கொண்டார்.

9-ம் வகுப்பு மாணவி லாத்தூர் அவுசா ரோடு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஷ்ராவனி சஞ்சய். இவர் தனியார் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

சிறுமி கடந்த புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடிதம் சிக்கியது

மேலும் போலீசார் மாணவி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு எழுதி வைத்த கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.

இதில் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் வகுப்பில் வைத்து தன்னை கேலி செய்து மனரீதியாக துன்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட மாணவி கூறியுள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

 

Share.
Leave A Reply

Exit mobile version