யாழ்.காரைநகர் – கொழும்பு தூர சேவையில் ஈடுபடும் காரைநகர் டிப்போவுக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதியும் நடத்துநருமே தாக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பஸ் டிப்போவிலிருந்து கொழும்பு நோக்கி பயணிப்பதற்காக யாழ்ப்பாணத்துக்கு சென்ற போது பஸ்ஸின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் காரைநகர் கடற்கரை வீதி சந்தியில் பஸ்ஸை வழிமறித்து அதில் ஏறி சாரதி மற்றும் நடத்துநரை தாக்கியிருப்பதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் சாரதியும் நடத்துநரும் சிறு காயங்களுடன் காரைநகர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் 35 முதல் 37 வயது மதிக்கத்தக்க 2 சந்தேகநபர்களை கைது செய்ததாகவும் பொலிஸார் கூறினர்.