) 2022ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு(25) வெளியாகியுள்ளன.

www.doenets.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சையின் மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

அதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருணாகல் மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களின் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி 144 ஆகும்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 143 ஆகும்.

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, புத்தளம், நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி 142 ஆகும்.

அனுராதபுரம், மொனராகலை மாவட்டங்களின் தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி 141 என அறிவிக்கப்பட்டுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள் திருத்தம் செய்வதாயின் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற்றிருந்தது.

 

 

 

Share.
Leave A Reply

Exit mobile version