ஐரோப்பாவில் போர் நடந்தால் அமெரிக்கா கல்லாக் கட்டும் என்பது வரலாற்று உண்மை. மேற்கு நாடுகள் உக்ரேனுக்கு வலிமை மிக்க போர்த்தாங்கிகளை வழங்கியுள்ளன.
ஆனால் அவை சிறப்பாக செயற்படுவதற்கு சிறந்த வான் படை ஆதரவு அவசியம். அதனால் அமெரிக்காவின் உயர்தொழில்நுட்பப் படைக்கல உற்பத்தி நிறுவனமான லொக்கீட் மார்ட்டீன் தனது F-16 போர்விமானங்களை எந்த நாடாவது வழங்க முன் வந்தால் அந்த நாட்டுக்கு தாம் விநியோகிக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
உக்ரேனின் அடுத்த முயற்ச்சி F-16ஐப் பெற்றுக் கொள்வது.
உக்ரேன் போர் விமானிகளுக்கு பயிற்ச்சி வழங்குவதை அமெரிக்க நாடாளுமன்றம் 2022 ஓகஸ்ட்டில் அனுமதி வழங்கியதுடன் அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்திருந்தது.
புட்டீனின் சினத்தை தவிர்க்கும் முகமாகவும் உக்ரேன் போர் உக்கிரமடைவதை விரும்பாமையாலும் உக்ரேனுக்கு F-16 போர்விமானங்களை வழங்குவதை அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜோ பைடன் நிறுத்தி வைத்தார்.
F-16 போர்விமானங்கள் இல்லாமலே உக்ரேனியர்களால் போரில் தாக்குப் பிடிக்க முடியும் என அமெரிக்கா இதுவரை கருதியிருந்தது.
இரசியா தனது படைக்கு மேலும் இரண்டு இலட்சம் பேரை சேர்க்கவிருப்பதால் உக்ரேனியர்கள் பெருமளவு உயிரிழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் உக்ரேன் இப்போது F-16 போர்விமானங்களை பெற்றுக் கொள்வதில் விருப்பம் கொண்டுள்ளது.
உலகில் அதிக அளவு உற்பத்தி செய்யப்பட்டு அதிக போர்முனைகளைக் கண்ட போர் விமான்ங்களில் F-16 போர்விமானங்கள் முன்னிலை வகிக்கின்றது. நான்காம் தலைமுறைப் போர்விமானமான F-16 எதிரியின் வான், தரை, கடல் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்க வல்லது.
இரசியாவின் எச்சரிக்கை
இரசிய நாடாளுமன்றமான டூவாவின் தலைவர் உக்ரேனுக்கு அமைதியான இரசிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடிய வலிமை மிக்க படைக்கலன்களை வழங்கும் அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் தமக்கான அழிவை தாமே தேடிக் கொளின்றன. அதிக வலிமை மிக்க படைக்கலன்களால் அந்த நாடுகள் தாக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
தன்னைத் தானே கூராக்கும் யூரேனியம்
யூரெனியம் உலகிலேயே மிகவும் அடர்த்தி கூடிய உலோகமாகும். அதனால் அது துப்பாக்கிச் சன்னங்கள் உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றது.
யூரேனியத்தால் உருவாக்கப்பட்ட சன்னம் இன்னும் ஒரு உலோகத்தின் மீது மோதும் போது அது தன்னை மேலும் கூர்மையாக்கிக் கொண்டு மோதப்படும் உலோகத்தை இலகுவாகப் பிளக்கும்.
இதை self-sharpening என்பர். ஒரு தாங்கியை அல்லது காப்பரணை (Bunker) யூரேனியத்தால் செய்யப்பட்ட குண்டு தாக்கும் போது அது தன்னைக் கூர்மையாக்கிக் கொள்வதுடன் கதிர் வீச்சையும் உமிழ்கின்றது.
அணுக்குண்டு உற்பத்திக்கு யூரேனியத்தைப் பதப்படுத்தும் போது அருகிய யூரேனியமும் (Depleted Uranium) பெறப்படுகின்றது.
அருகிய யூரேனியம் பதப்படுத்தப்பட்ட யூரேனியத்திலும் பார்க்க கதிர்வீச்சு மிகவும் குறைந்தது.
அதனால் அமெரிக்கா அருகிய யூரேனியமும் (Depleted Uranium) பாவித்து துப்பாக்கி குண்டுகள் மற்றும் தாங்கிகளில் இருந்து வீசப்படும் குண்டுகளை உருவாக்கியது. அவை Uranium core armour-piercing” cells என அழைக்கப்படும்.
Uranium core armour-piercing” cells
போர்த்தாங்கிகளில் “Uranium core armour-piercing” cells பாவிக்கப்படுவதுண்டு. அவை எதிரிகளில் வலிமை மிக்க காப்பரண்களையும் தாங்கிகளையும் அழிக்க வல்லன.
1991இல் வளைகுடாப் போரிலும், 1992இல் பொஸ்னியா போரிலும் அமெரிக்கா அமெரிக்கா Uranium core armour-piercing” cellsகளைப் பாவித்தது.. வளைகுடாப் போரிலும் பொஸ்னியாப் போரிலும் Uranium core armour-piercing” cells பாவிக்கப்பட்ட இடங்களில் உள்ள மக்கள் கதிர்வீச்சால் பாதிக்கப் பட்டனர்.
இதனால் அமெரிக்கா அந்தக் குண்டுகளின் உற்பத்தியை நிறுத்திவிட்டதாக 2015இல் சொன்னது.
ஆனால் அதே ஆண்டில் சிரியாவில் அமெரிக்கா அக்குண்டுகளைப் பாவித்தது. எதிரியின் மிகக் கடினமான கவசங்களை அழிப்பதறிகு இக்குண்டுகள் பொருத்தமானவையாக இருப்பதால் அக்குண்டுகளை அமெரிக்கா இன்னும் இரகசியமாக வைத்திருக்கலாம்.
உக்ரேனுக்கு வழக்கப்படும் தாங்கிகளில் யூரேனியம் குண்டுகள்
யூரேனியம் குண்டுகளை ஜேர்மனியின் லெப்பேர்ட்-2 போர்த்தாங்கிகள், அமெரிக்காவின் Bradly போர்வண்டிகள் அமெரிக்காவின் Marder போர்வண்டிகள் ஆகியவை Uranium core armour-piercing” cellsகளை வீசக் கூடியவை.
இரசியப் படையினர் மீதோ அல்லது படை நிலகள் மீதோ வீசப்பட்டால் அது அணுக்குண்டுப் போருக்கு ஒப்பானதாகும் என இரசியா எச்சரித்துள்ளது.
ஐரோப்பவின் பாதுகாப்பிற்கும் ஒத்துழைப்பிற்குமான அமைப்பிடம் (Organisation for Security and Cooperation in Europe) இரசியா இதை தெளிவு படக் கூறியுள்ளது.