பொரளை பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் வறிய மக்களை ஏமாற்றி சிறுநீரகத்தை பெற்றுக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த (53) வயதுடையவர் எனவும் இந்த சிறுநீரக கடத்தில் தொடர்பில் இதுவரை நான்கு ஆண்கள் மற்றும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொரளை பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.