பேருந்து மற்றும் ரயில் டிக்கெட்டுகளுக்குப் பதிலாக புதிய போக்குவரத்து அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத் தானது.

போக்குவரத்து அமைச்சு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் இலங்கை போக்குவரத்து சபையை உள்ளடக்கி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

மாகும்புர – காலி அதிவேக நெடுஞ்சாலையில் பஸ்களுக்கான இந்தப் புதிய சேவை உடனடியாக ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும், கூடிய விரைவில் இந்த முறை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மார்ச் மாத இறுதிக்குள் மொபைல் செலுத்துகைகளும் செயற்படுத் தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Share.
Leave A Reply

Exit mobile version