தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நடித்து வருகிறார். இந்த படத்தின் படபிடிப்பு சென்னை, ராஜஸ்தானில் உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து இந்தி, தெலுங்கு என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.
சமீபத்தில் அவரது பப்ளி பவுன்சர் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீப காலமாக ஆன்மிக விஷயங்களில் தமன்னா ஈடுபாடு காட்டி வருவதை பார்க்க முடிகிறது.
படப்பிடிப்பு இல்லாத நாட்களில் கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இமயமலை பகுதியில் ஆன்மிக பயணம் மேற்கொண்டார்.
பிரசித்தி பெற்ற வைஷ்ணவி தேவி கோவிலுக்கும் சென்று வந்தார். ஆன்மிக பயணம் தனக்கு முதல்முறையாக உற்சாகமான உணர்வை தந்தது என்றார்.
இந்த நிலையில் தமன்னா தனது இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கத்தில் ஒரு வீடியோவினை பகிர்ந்துள்ளார்.
இதில் ஈஷாவில் உள்ள லிங்கபைரவி கோவிலை பற்றி உணர்ச்சிகரமாக கூறியுள்ளார். இந்த வீடியோவிற்கு நடிகை சமந்தா பைரவி தேவி எனவும் நடிகை காஜல் அகர்வால் சாமி கும்பிடும் எமோஜியையும் கமெண்டாக பதிவிட்டுள்ளனர்.