கன­டாவைச் சேர்ந்த 18 வயது யுவ­தி­யொ­ருவர், லொத்தர் சீட்­டி­ழுப்பில் 48 மில்­லியன் கனே­டிய டொலர் (சுமார் 1,318 கோடி இலங்கை ரூபா) ஜக்பொட் பரிசை வென்­றுள்ளார்.

ஜூலியட் லெமோர் எனும் இந்த யுவதி, ‘கோல்ட் போல்’ லொத்தர் சீட்­டி­ழுப்பில் இப்­ப­ரிசை வென்­றுள்ளார்.

தான் லொத்தர் டிக்கெட் வாங்­கி­யமை இதுவே முதல் தடவை என ஜூலிட் கூறி­யுள்­ளார்.

கன­டாவில் இத்­த­கைய பெருந்­தொகை ஜக்பொட் பரிசை வென்ற மிக இள­மை­யா­னவர் ஜூலியட் தான் என ஒன்­டா­ரியோ லொட்­டரி அன்ட் கேமிங் கோர்­ப­ரேஷன் நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

எனினும், தனது கல்­வியை பூர்த்தி செய்து மருத்­து­வ­ரா­கு­வ­தற்கு தான் திட்­ட­மிட்­டுள்­ள­தாக ஜூலியட் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version