துருக்கி-சிரியாவில் கடந்த 36 மணி நேரத்தில் 100 நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன. இஸ்தான்புல் துருக்கி- சிரியா எல்லையில் நேற்று முந்தினம் அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீற்றர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீற்றர் (14.9 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது.
மேலும் 100 ஆண்டுகளுக்கு பிறகு இப்பகுதியைத் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும்.
இந்த நிலநடுக்க பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. துருக்கியில் 7,108 பேரும், சிரியாவில் 2,530 பேரும் உயிரிழந்துள்ளனர், மொத்தம் 9,630 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.12 ஆயிரத்தை நெருங்குகிறது .
அரசு நடத்தும் ஏஜென்சியால் நடத்தப்பட்ட ஆய்வில் இதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகளை கஹ்ராமன்மாராஸ், காசியான்டெப், சன்லியுர்பா, தியர்பாகிர், அதானா, அதியமான், மாலத்யா, உஸ்மானியே, ஹடாய் மற்றும் கிலிஸ் என பட்டியலிட்டுள்ளது.
துருக்கியில் 4 மற்றும் அதற்கு மேற்பட்ட ரிக்டர் அளவுகளில் 100-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. கடந்த 36 மணி நேரத்தில், துருக்கியில் 4 மற்றும் அதற்கு மேற்பட்ட ரிக்டர் அளவுகளில் 100க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.
பெரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அதே பொதுப் பகுதியில் ஏற்படும் சிறிய நிலநடுக்கங்களே பின்அதிர்வுகள் ஆகும்.
ரிக்டர்-6 நிலநடுக்கம் வலுவானதாகக் கருதப்படுகிறது மற்றும் ரிக்டர்-4-ஐ விட 100 மடங்கு வலிமையானது. இந்த வகையான நிலநடுக்கம், குறிப்பாக அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில், நிறைய சேதங்களை ஏற்படுத்தும்.
கடந்த 36 மணி நேரத்தில், தென்கிழக்கு துருக்கியில் குறைந்தபட்சம் 81 எண்ணிக்கையிலான 4 ரிக்டர் நிலநடுக்கங்கள், 20 எண்ணிக்கையிலான 5 ரிக்டர் நிலநடுக்கங்கள், மூன்று எண்ணிக்கையிலான 6 ரிக்டர் நிலநடுக்கங்கள் மற்றும் இரண்டு 7 ரிக்டர் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.