துருக்கி சிரியாவில் பூகம்பங்களினால் உயிரிழந்தோர் தொகை  இருபதினாயிரமாக அதிகரித்துள்ளது.

பேரழிவின் அளவு முழுமையாக இன்னமும் தெரியவில்லை என ஐநா தெரிவித்துள்ள நிலையிலேயே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இருபதினாயிரத்திற்கும் அதிகமாக மாறியுள்ளது.

மீட்புபணியாளர்கள் உயிர்தப்பியிருக்க கூடியவர்களை இன்னமும் இடிபாடுகளிற்கு இடையில் தேடிவருகின்றனர்.

எனினும் பூகம்பம் தாக்கி 100 மணித்தியாலாங்கள் கடந்துள்ள நிலையில் நம்பிக்கைகள் குறைவடைந்துள்ளன.

உணவு குடிநீர் இருப்பிடம் போன்றவை இன்றி காணப்படும் உயிர்தப்பியவர்களின் உயிர்களிற்கு கடும் குளிரால் ஆபத்து ஏற்படலாம் என்ற எச்சரிக்கையும் வெளியாகியுள்ளது.

ஒருஇலட்சத்திற்கும் அதிகமானவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள போதிலும் போதிய வாகனங்கள் இன்மை சேதமடைந்துள்ள வீதிகள் போன்றவற்றால் அவர்களின் மீட்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version