யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்ட ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினா் செ.கஜேந்திரன், சட்டத்தரணி க.சுகாஸ் உள்ளிட்ட 18 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனா்.

கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாண காவல்நிலையத்தில் தடுத்து வைத்து சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர், சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்திய பின்னர் யாழ்ப்பாண மேலதிக நீதிவானின் வாசஸ்தலத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு 11 மணியளவில், 18 பேரையும் காவல்துறையினர் முற்படுத்தினர்.
அதனை அடுத்து கைதானவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் பிணை விண்ணப்பம் செய்தனர்.

காவல்துறையினர் மற்றும் சட்டத்தரணிகளின் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மேலதிக நீதவான் 18 பேரையும் தலா 3 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆள் பிணையில் செல்ல அனுமதித்தார். அத்துடன் வழக்கினை எதிர்வரும் 22ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version