தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நீதிமன்றம் வருகை தருமாறு கூறும் பொலிஸ் கட்டளையை நேற்று (14) பொலிஸார் வழங்கியிருந்தனர்.

அந்தக் கட்டளை சிங்கள மொழியில் மாத்திரம் இருந்ததன் காரணமாக, சிங்கள மொழி தனக்கு வாசிக்கத் தெரியாது எனவும் ஆகவே, கட்டளையைத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தமிழில் கொண்டு வந்து தருமாறு கூறி, பொலிஸாரிடதே தனை மீளக் கையளித்தார் எம்.பி.

பின்னர் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து கொண்டு வந்து கொடுத்தபோது, நீதிமன்றத்துக்கு தன்னை வருவதற்கு அழைக்கும் அழைப்பை நீதிமன்றம் தான் வழங்கமுடியுமே தவிர, நீதிமன்றத்துக்கு அழைக்கும் அழைப்பை பொலிஸாரால் வழங்கமுடியுமா என பாராளுமன்ற உறுப்பினர் வினவிய போது, பொலிஸார் அமைதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version