தம்புள்ளை வைத்தியசாலைக்கு முன்பாக தனியார் பேருந்து ஒன்றும் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும், ஒன்றுடன் ஒன்று சமாந்தரமாக ஓட்டிச் சென்றதில், இரண்டு பேருந்துகளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் ஒரு மணித்தியாலம் பேருந்துக்குள் 50க்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டனர்.
இந்த இரண்டு பேருந்துகளும் தம்புள்ளை நகரிலிருந்து ஒரே நேரத்தில் பயணிக்க ஆரம்பித்ததாகவும், நகரத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை ஒன்றையொன்று முந்திச் செல்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
விபத்து
விபத்தின் போது இரு பேருந்துகளிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்ததாகவும், தனியார் பேருந்து மாட்டிக் கொண்டதில் 50-க்கும் மேற்பட்டோர் பேருந்தில் சிக்கியதால் பேருந்தில் இருந்து இறங்க முடியாமல் தவித்ததாகவும் அதில் பயணித்த சிலர் தெரிவித்திருந்தனர்.
குறித்த விபத்து தொடர்பாக தம்புள்ளை போக்குவரத்து காவல் உத்தியோகத்தர்கள் சோதனை செய்து போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை அகற்றி தனியார் பேருந்தில் இருந்து பயணிகளை விரைவாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.