இந்த வீடியோவை @BornAKang என்பவர் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.31 வினாடிகள் கொண்ட வீடியோவில் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் லிப்டில் நிற்பதைக் காட்டுகிறது.

அந்த பெண் தனது மொபைலில் எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறார். திடீரென்று, அந்த ஆண் அந்த பெண்ணின் அருகில் செல்ல முயன்றார்,

இது அவளை திடுக்கிட வைத்தது. இந்த நேரத்தில், அவள் அந்த நபரிடமிருந்து விலகிச் செல்கிறார்.

அந்த மனிதன் மீண்டும் அவரை பின்னால் இருந்து பிடிக்க முயற்சிக்கிறார்.பின்னர் அந்த எப்ண் மேல் கை வைக்கிறார்.

சுதாரித்து கொண்ட பெண் அந்த ஆணுக்கு ஒரு அறைவிட்டார். அவனை பின்னுக்கு தள்ளி மீண்டும் அறைந்தாள்.

அதுமட்டுமல்லாமல் ஓங்கு முட்டிகாலால் அவரது அந்தரங்கபகுதியில் ஒரு உதைவிட்டார். இதனால் அந்த ஆண் வலியால் துடித்தார்.

அந்த மனிதனின் வாழ்நாள் முழுவதற்கும் இது ஒரு பாடமாக இருக்கும் . பின்னர் அந்த பெண் லிப்டைவிட்டு வெளியேறினார்.

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி உள்ளது. பல தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதுதான் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் கற்றுக் கொள்ள வேண்டிய எதிர்வினை என கூறி உள்ளனர்.

மற்றொரு பயனர், ஒரு நபர் தனது மகளுக்கு தற்காப்புக் கலைகளை கற்றுக்கொடுக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version