லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவர் முறையான அனுமதி இல்லாமல், அந்த நிறுவனத்தில் இருவேறு பதவிகளுக்குரிய சம்பளம், வாகனம், எரிபொருள் கொடுப்பனவுகள் உட்பட இரண்டு பதவிகளுக்குமாக மாதம் சுமார் பதினைந்து இலட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் பெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி, தலைவர் பதவிக்கு மாதாந்த சம்பளமாக 5,75,000 ரூபாயும், நிர்வாக அதிகாரிக்கான சம்பளத்தில் ஐம்பது வீதமும் பெற்றுள்ளார்.

மேற்படி கொடுப்பனவுகளை அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையே தீர்மானித்துள்ளதாகவும், அதற்கான கருவூலத்தின் அங்கீகாரம் பெறப்பட வேண்டிய போதிலும், அனுமதி பெறப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Litro Gas Lanka Limited தொடர்பில் 2021 டிசம்பர் 31 ஆம் திகதி வெளியிடப்பட்ட கணக்காய்வு அறிக்கையில் கணக்காய்வாளர் நாயகம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நிறுவனத்தின் உள் ஆதாரங்களின்படி, 2019 க்குப் பிறகு, ஒரே நபர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆகிய இரண்டு பதவிகளையும் வகித்துள்ளார் என தெரியவருகின்றது. R

Share.
Leave A Reply

Exit mobile version