மணமகனின் குடும்பத்தினர் வரதட்சணையாக மற்ற பொருள்களுடன், ஃபர்னிச்சர்களையும் கேட்டனர். பயன்படுத்திய ஃபர்னிச்சர்களை மணமகளின் குடும்பத்தினர் கொடுத்ததாகச் சொல்லி அவர்கள் திருமணத்தை நிறுத்திய அவலம் நடந்துள்ளது.

2023-ம் ஆண்டிலும் வரதட்சணை கேட்கப்படுவதும் கொடுக்கப்படுதும் அவலம். பல காரணங்களுக்காக திருமணங்கள் நின்றுபோவது குறித்து கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால், ஹைதராபாத்தில் பழைய ஃபர்னிச்சர்களை வரதட்சணையாகக் கொடுத்ததாகக் கூறி, மணமகன் வீட்டினர் திருமணத்தன்று வராமல் போக, திருமணம் நின்றுபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த திருமணமானது, பிப்ரவரி 19 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் குறிப்பிட்ட நாளில் மணமகன் திருமணத்திற்கு வரவில்லை.

இதனால் விரக்தி அடைந்த மணமகள் வீட்டினர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து மணமகளின் தந்தை கூறுகையில், ’மணமகன் தரப்பில் கேட்ட பொருள்களை வரதட்சணையாகக் கொடுக்கவில்லை எனவும், ஃபர்னிச்சர் பழையதாக இருந்தது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

நான் திருமணத்திற்கான விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தேன். உறவினர்கள் மற்றும் விருந்தினர்கள் அனைவரையும் அழைத்தேன். ஆனால் மணமகன் திருமணத்திற்கு வரவில்லை’’ எனக் கூறியுள்ளார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version