தாய்லாந்தின் சரபுரி மாகாணத்தைச் சேர்ந்தவர் ‘வால்‘. இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் தனது 8 ஆவது ஆண்டு திருமண நாளைக் கொண்டாடும் வகையில் வால், தனது மனைவிக்கு வித்தியாசமான பரிசொன்றைக் கொடுக்க விரும்பியுள்ளார்.

இதனையடுத்து பச்சை குத்தும் நிலையமொன்றுக்குச் சென்ற அவர் தனது திருமண சான்றிதழை மணிக்கட்டில் முழுதாகப் பச்சை குத்தியுள்ளார்.

இதற்கு அவர் சுமார் 8 மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க வேண்டியிருந்துள்ளதாக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரது கையைப் பார்த்த மனைவில் அதிர்ச்சியில் உறைந்து போனார் எனவும் தனது கைப் பார்க்கும் போதெல்லாம் தான் மனைவியுடன் கழித்த நல்ல நேரங்கள் நினைவுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version