பஸ்ஸில்  பயணித்த யுவதி ஒருவருடன் சில்மிஷம் செய்த  குற்றச்சாட்டின் பேரில்  தலைமை பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

பல்வேறு முறைப்பாடுகள் பிரிவுகளின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் 54 வயதுடைய தலைமை பொலிஸ் பரிசோதகரான இவர்  களுத்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொலிஸ் நிலையமொன்றைச் சேர்ந்தவராவார்.

அம்பலாங்கொடை நோக்கிப் பயணித்த  பஸ்ஸில்  பயணித்த பயிற்சி தாதி ஒருவர் அருகில் நின்றிருந்த பொலிஸ் பரிசோதகர் அநாகரிகமான முறையில் நடந்துகொண்டுள்ளதாகவும்  இதனையடுத்து குறித்த பஸ்ஸில் சென்ற பயணிகள்   ஆத்திரமடைந்து பரிசோதகரை தாக்கி   பொலிஸில்  ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version