கைலாசா பற்றிய சர்ச்சைகள் இருந்தாலும் நித்யானந்தா அவற்றை பற்றி கவலைப்படவில்லை.

மாறாக கைலாசா பற்றிய புதிய அறிவிப்புகளை நித்யானந்தா அறிவித்து கொண்டே இருக்கிறார்.

புதுடெல்லி: சாமியார் நித்யானந்தாவின் கைலாசா நாடு பற்றிய பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்தியாவில் வழக்குகளில் தேடப்படும் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடிய நிலையில், ஈக்வடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி அந்த தீவுக்கு கைலாசா என பெயர் சூட்டியிருப்பதாக தகவல்கள் வெளியானது.

அதே நேரம் கைலாசா நாட்டை அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்ததாக கூறி கைலாசாவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்களில் சில புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா.மாநாட்டில் கைலாசா சார்பில் பெண் பிரதிநிதிகள் பங்கேற்று பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

கோவில் தலைமை நிர்வாகி அறிவிப்பு இதையடுத்து கைலாசா பெண் பிரதிநிதிகள் பேசிய உரை ஏற்றுக்கொள்ளப்படாது என ஐ.நா. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கைலாசா நாட்டிற்கு ஐ.நா.சபை அங்கீகாரம் அளித்துள்ளதா என்பது பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை.

இதனால் கைலாசா பற்றிய சர்ச்சைகள் இருந்தாலும் நித்யானந்தா அவற்றை பற்றி கவலைப்படவில்லை.

மாறாக கைலாசா பற்றிய புதிய அறிவிப்புகளை அறிவித்து கொண்டே இருக்கிறார். அந்த வகையில் நித்யானந்தா நிறுவி உள்ள கைலாசாவிற்கு ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் கைலாஷ்’ என்று பெயரிட்டுள்ளார்.

மேலும் கைலாசாவின் ஐக்கிய மாகாணங்களில் இலவச மின்குடியுரிமைக்கு இப்போதே விண்ணப்பிக்கலாம் என கைலாசாவின் சமூகவலைத்தள பக்கங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், உலகம் எங்கிலும் உள்ள இந்துக்களுக்கு என்று உருவாகி இருக்கும் நாடு கைலாசா. எனவே உலகம் எங்கிலும் உள்ள இந்துக்கள் கைலாசாவின் குடியுரிமை பெற வேண்டும்.

அதனால் அவர்கள் இ-குடியுரிமை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த இ-குடியுரிமை பெறுவதற்காக https://kailaasa.org/e-citizen/ என்ற சிறப்பு இணைய தளமும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

https://kailaasa.org/e-citizen/ என்ற இந்த இணைப்பை கிளிக் செய்து விபரங்களை பூர்த்தி செய்தால் கைலாசா நாட்டின் இ-குடியுரிமையை பெறலாம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

 

Share.
Leave A Reply

Exit mobile version