வவுனியா நெடுங்கேணி பகுதியில் மகனின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியில் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் மாடு முட்டி படுகாயமடைந்த நிலையில் இராசரட்ணம் கனகராஜா என்ற 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

குறித்த மரணச் செய்தியை அறிந்த குறித்த நபரின் தாயாரும் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்.

இருவரது மரண சடங்குகளும் கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியில் இடம்பெறவுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version