புஸ்ஸல்லாவை காவல்துறை பிரிவிற்குட்பட்ட சோகம தோட்டத்தில் தேயிலை செடிகளுக்கு இடையிலிருந்து நேற்று(4) பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிரதேசவாசி ஒருவர் காவல்துறையினருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர், ஹெல்பொட, கட்டுகிதுல பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய, திருமணமான பெண்ணொருவர் என காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நீதிவான் விசாரணையின் பின்னர் சடலம் கண்டி பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version