பலாங்கொட பின்னவல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும், சிறுமி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகத்திற்குரிய 50 வயதுடைய அதிபர் பலாங்கொட அல்லராவ பிரதேசத்தில் வசிப்பவர் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் இன்று பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version