அல்லைப்பிட்டி பிரதான வீதியில் உள்ள ஆலமரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவல்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் பழைய பூங்காவீதி யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த மெல்டன் அருண் சஞ்சீவன் வயது 19 என ஊர்காவல்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தகப் பை முதுலில் தொங்கவிட்ட படி, குறித்த இளைஞன் தூக்கில் தொங்கியுள்ளார்.

கல்வி நிலையம் ஒன்றுக்கு சென்று விட்டு குறித்த இளைஞன் உயிரை மாய்த்துக் கொள்வதற்காக அல்லைப்பிட்டி பகுதிக்கு வந்திருக்கலாமென சந்தேகம் தெரிவிப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version