ஜப்பானில் ஒரு பகுதியில் நீல மலர்கள் பூத்து குலுங்கும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

 

சமூக வலைதளங்கள் எப்போதும் பல ஆச்சரியமான தகவல்களை மற்றும் வீடியோக்களை மிக விரைவில் பலரிடத்திலும் கொண்டு போய் சேர்த்து விடும் வல்லமை படைத்தது.

மக்களின் மனதை தொடும் விஷயங்கள் எப்போதுமே இணையத்தில் வெகு விரைவில் வைரலாகி விடுவது உண்டு.

அதிலும் குறிப்பாக இயற்கையின் அதீத அழகை வெளிப்படுத்தும் வீடியோக்கள் மற்றும் பதிவுகள் சமூக வலை தளங்களில் எப்போதும் கோடிக்கணக்கான மக்களிடையே அதிக அளவில் ஷேர் செய்யப்படும்.

அந்த வகையில் ஜப்பானில் மலர்ந்துள்ள நீல மலர் குறித்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

நீல மலர்

ஜப்பானின் தலைநகர் டோக்கியோ அருகே இந்த மலர்கள் பூத்திருக்கின்றன. மலைப் பகுதி முழுவதும் நீல நிறம் கொண்ட மலர்கள் பூத்திருப்பதை காண சுற்றுலா வாசிகள் அந்த பகுதி முழுவதும் குவிந்து வருகின்றனர்.

ஜப்பானின் ஹிட்டாச்சி கடலோரப் பூங்கா, இபராக்கி ப்ரிஃபெக்சரில் அமைந்துள்ள இந்த பள்ளத்தாக்கு, ஒவ்வொரு வசந்த காலத்திலும் பூக்கும் நீல நிற மலர்களின் பரந்த வயல்களுக்கு பெயர் பெற்றது. அந்நாட்டு மக்கள் இதனை Nemophila Harmony என அழைக்கின்றனர்.

பூங்கா

ஏறத்தாழ 350 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட இந்த பூங்கா காடுகள், மலைகள் மற்றும் தோட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு இயற்கை நிலப்பரப்புகளைக் கொண்டுள்ளது. இங்கு ஏராளமான பறவைகள் மற்றும் விலங்குகள் வசித்து வருகின்றன. வசந்த கால துவக்கத்தில் மக்கள் இந்த பள்ளத்தாக்கில் மலரும் நீல நிற பூக்களை காண இப்பகுதிக்கு படையெடுக்கின்றனர். சொல்லப்போனால் இந்த காலகட்டத்தில் மில்லியன் கணக்கில் மக்கள் இந்த பகுதிக்கு வருகின்றனராம்.

வீடியோ

வட அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட இந்த Nemophila செடி, தரை முழுவதும் படர்ந்திருக்கும் அழகை காணவே பலரும் காத்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் ஐஏஎஸ் அதிகாரியான ஹரி சந்தனா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த நீல நிற மலர்களின் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலை தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், நெட்டிசன்கள்,”வானம் தரையில் படர்ந்ததை போல இருக்கிறது” என்றும், “ஒரு முறையாவது இந்த இடத்தை பார்த்துவிடவேண்டும்” எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version