பிங்வெல்ல பிரதேசத்தில் உள்ள வீட்டிற்குள் நேற்று (07) மதியம் மர்மமான முறையில் இறந்து கிடந்த 6 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் ஹிரண பொலிஸார் விசேட ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
தாய் மற்றும் தாயின் காதலனுடன் வசித்து வந்த குறித்த சிறுமி கடந்த சில தினங்களாக சுகயீனமுற்று இருந்ததாகவும் ஆனாலும் சிறுமிக்கு எந்தவித மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமி தாயின் காதலனால் பலமுறை உடல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கேட்டல் மற்றும் பேச்சுக் குறைபாடுள்ள இந்த சிறுமியின் உடலில் வடுக்களும் வீக்கங்களும் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த சிறுமியின் 25 வயதான தாயும் 29 வயதான தாயின் காதலனும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமியின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக களுபோவில தெற்கு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.