திருகோணமலை – சேருதுவர பிரதேசத்தில் உள்ள பாடாலை ஒன்றில் தரம் 7இல் கல்விகற்கும் மாணவன் ஒருவருக்கு மதிய உணவில் நாய்களுக்கு கொடுக்கும் மருந்தை கலந்து கொடுத்ததாக கூறப்படும் மாணவர்களுக்கு எதிராக சட்ட நடைவடிக்கை எடுக்க வேண்டாம் என பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளதாக சேருதுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான தொரு செயலை செய்த ஆறு மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு, பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அப்பகுதிக்கு பொறுப்பான சேஷ்ட பொலில் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மாணவனில் பெற்றோர் பொலிசாரிடம் விடுத்துள்ள கோரிக்கை தற்போது திருகோணலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் குறித்த மாணவன் தனது வகுப்பில் கல்விகற்கும் தனது சக நண்பர்களையும் மன்னிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிப்படுகிறது.
நாய்களுக்கு கொடுக்கப்படும் மருந்தை உணவில் கலந்ததாக கூறப்படும் ஆறு மாணவர்களையும் அழைத்து எச்சரித்தால் போதும் என நோய்வாய்ப்பட்ட மாணவனின் பெற்றோர் பொலிசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
மேலும் நோய்வாய்ப்பட்ட மாணவனின் பெற்றோர் ஆறு மாணவர்களையும் மன்னிக்கமுடிவு செய்திருப்பதை தாமும் பாராட்டுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.