கரூர்: என் கணவருக்கு என்னை துளிகூட பிடிக்கவில்லை.. அதை இந்த 13 நாட்களில் புரிந்துகொண்டேன் என்று புதுமணப்பெண் எழுதியுள்ள கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கரூர், தாந்தோணிமலை பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் ராகப்பிரியா.. 27 வயதாகிறது.. இவர் பொரணியில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலைபார்த்து வருகிறார்.

2 வாரங்களுக்கு முன்புதான் ராகப்பிரியாவிற்கு திருமணம் நடந்தது.. கணவர் பெயர் சுதர்சன்.. ஆனால், அதற்குள்ளேயே சுதர்சனின் கள்ளக்காதல் விஷயம், ராகப்பிரியாவுக்கு தெரிந்து அதிர்ந்து போனார்..

தகாத உறவு
இன்னொரு பெண்ணுடன் தன்னுடைய கணவருக்கு தகாத உறவு இருப்பதை அறிந்ததுமே மனம் உடைந்துபோனாராம் ராகபிரியா.. இதை பற்றி கணவரிடமே கேட்டுள்ளார்.

. அதுவே இந்த புதுமண தம்பதிக்குள் தகராறாக வெடித்துள்ளது.. இதனால் உச்சக்கட்ட வெறுப்புக்கு சென்றுள்ளார்..

தினமும் அழுதுகொண்டே இருந்த ராகப்பிரியா, வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு போட்டு இறந்துவிட்டார்..

இது குறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீசார் சம்பவ இடத்தற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..

உருக்கம் இறுக்கம்
வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணையையும் துவங்கி உள்ளனர். கல்யாணம் ஆகி 2 வாரத்திலேயே இளம்பெண் இறந்தது, குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.

இதனிடையே, ராகப்பிரியா தற்கொலைக்கு முன்பு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார்.. அதில், தன்னுடைய தற்கொலைக்கு கணவர்தான் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்..

அந்த கடிதத்தில், “எனக்கு பிப்ரவரி 23ம் தேதிதான் கல்யாணம் ஆனது.. என் புருஷனுடன் இல்லற வாழ்வில் 2 நாள்தான் மட்டும்தான் சந்தோஷமாக இருந்தேன்..

ராகப்பிரியா
ஆனால், அவருக்கு என்னை பிடிக்கவேயில்லை.. என் மேல் துளிகூட விருப்பம் இல்லை என்பதை 13 நாட்களில் புரிந்துகொண்டேன்..

என்னை மனதளவில் மிகவும் பாதிப்படைய செய்தான் சுதர்சன். என் குடும்பத்துக்காக எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டேன்..

என் மரணத்துக்கு காரணம் ரம்யாவும், சுதர்சனும் தான்” என்று அதில் கைப்பட எழுதியுள்ளார் ராகப்பிரியா.. இதைத்தவிர, ராகப்பிரியா வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவும் சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.. திருமணமாகி 2 வாரமே ஆகியுள்ளதால், இந்த சம்பவம் குறித்து கோட்டாட்சியர் விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.

கண்ணீர்
கண்ணீர் எல்லா பெண்களைப்போலவே ஏகப்பட்ட கனவுகளுடன், மாமியார் வீட்டில் அடியெடுத்து வைத்துள்ளார் ராகப்பிரியா.. கணவருக்கு தன்னை பிடிக்கவில்லை என்பதை அறிந்து மிகவும் கவலைப்பட்டுள்ளார்.

. அத்துடன் இன்னொரு பெண்ணுடன் உறவு என்பதையும் அறிந்து நிலைகுலைந்து போயுள்ளார்..

நேரடியாகவே கணவரிடம் கேள்வி எழுப்பியும்கூட, அது தகராறில்தான் முடிந்ததே தவிர, நல்ல முடிவு எதுவும் கிடைக்கவில்லை..

தன்னுடைய வீட்டிலும் இதை பற்றி பகிர்ந்து கொள்ளாத முடியில், விரக்தியில் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்கிறார்கள். அழுதுகொண்டே இவர் பேசும் வீடியோவும் இணையத்தில் ஷேர் ஆகி வருகிறது.

 

 

Share.
Leave A Reply

Exit mobile version