நாடளாவிய ரீதியில் பதிவாகும் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைகள் தொடர்பாவழக்குகளில் பெரும்பாலானவை வடமேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக
சிறுவர் காப்புறுதி அதிகாரசபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்
சட்டமா அதிபர் திணைக்களத்தின் தரவுகளின்படி நாடளாவிய ரீதியில் உயர் நீதிமன்றங்களில் தற்போது நிலுவையில் உள்ள சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளின் எண்ணிக்கை 6443 எனவும் அதில் 543 குருநாகல் மேல் நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.