உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயல்பட்ட சஹ்ரான் ஹாசிமின் மனைவி பாத்திமா ஹாதியா, கல்முனை மேல் நீதிமன்றில் நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இருந்து நான்கு வருடங்களாக தடுப்புக்காவலில் இருந்த அப்துல் காதர் பாத்திமா ஹாதியா விடுவிக்கப்பட்டுள்ளார்.
2019 ஏப்ரலில் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்த சில நாட்களுக்குப் பிறகு சாய்ந்தமருதில் நடந்த குண்டு வெடிப்பின் பின்னர் ஹாதியா கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.