கொக்கல பிரதேசத்தில் கார் ஒன்றுடன் புகையிரதம் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கொக்கல விமானப்படை தளத்திற்கு அருகில் உள்ள புகையிரதக் கடவையின் ஊடாக கார் ஒன்று கவனக்குறைவாக பயணிக்க முற்பட்டதில் கண்டியில் இருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த புகையிரதத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காருக்குள் 2 பேர் சிக்கிக் கொண்டதையடுத்து, அவர்களைக் காப்பாற்ற அப்பகுதி மக்கள் பெரும் முயற்சி மேற்கொண்டனர்.

எனினும் இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version