அத்தனகல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் 11 ஆம் வருட மாணவி ஒருவருக்கு தனது நிர்வாண புகைப்படங்களை வட்ஸ்அப் ஊடாக அனுப்பியதாக கூறப்படும் பாடசாலையின் பிரதி அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது.

47 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாட்ஸ்அப் செயலி மூலம் மாணவியிடம் தனது நிர்வாணத்தை காட்டுவது மட்டுமின்றி, பாடசாலை நாட்களில் குறித்த மாணவியை அலுவலகத்துக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியமையும் விசாரணக்களில் தெரிய வந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version