திருமணத்திற்காக மணமகளின் தரப்பில் இருந்து 60,000 ரூபாயும், மணமகனுக்குப் போட வேண்டிய தங்க மோதிரத்திற்கு 15,000 ரூபாய் செலவழித்துள்ளனர்.

பெற்றோர்கள் பார்த்து, நிச்சயமாகி, மணமேடை வரை செல்லும் திருமணங்கள், எதிர்பாராத பல சூழல்களில் நின்று போவதுண்டு.

சமீபகாலத்தில் மணமகன் மேடையில் குடித்திருந்ததால், சரியான நேரத்திற்குத் திருமணத்திற்கு வராததால் எனப் பல காரணங்களுக்காகத் திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம், திர்வா கோட்வாலி என்ற பகுதியில், சோனி என்ற பெண்ணுக்கும் சோனு என்பவருக்கும் 2022 டிசம்பர் 4-ம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

ஆனால் மணப்பெண்ணின் 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் குறைவாக இருப்பதாகக்கூறி திருமணத்தை நிறுத்தி உள்ளனர்.

திருமணத்திற்காக மணமகளின் தரப்பில் இருந்து 60,000 ரூபாயும், மணமகனுக்குப் போட வேண்டிய தங்க மோதிரத்திற்கு 15,000 ரூபாயும் செலவழித்துள்ளனர்.

திருமணம் நின்றதால் மனவேதனையடைந்த பெண்ணின் தந்தை, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மணமகனின் வீட்டார் திருமண செலவுகளைத் தாண்டி கூடுதல் வரதட்சணையைக் கேட்டதாகவும், அதனைத் தரமுடியாத பட்சத்தில், மகளின் மதிப்பெண்களைக் காட்டி திருமணத்தை நிறுத்தியதாகவும் கூறியுள்ளார்.

நிலைமையைச் சரிசெய்யக் காவல் துறை அதிகாரிகள் இரு தரப்பினரிடத்தில் பேசி வருகின்றனர். 12-ம் வகுப்பு மதிப்பெண்களைச் சுட்டிக்காட்டி திருமணத்தை நிறுத்தியது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version