வெல்லவாய எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று காணாமல் போன மூன்று இளைஞர்களின் சடலங்கள் இன்று புதன்கிழமை (22) மீட்கப்பட்டுள்ளன.

நேற்று ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் காணாமல் போன ஏனைய மூவரின் சடலங்களுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் இருந்து மொனராகலை வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்லாவல நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா வந்த 10 இளைஞர்கள் நீர்வீழ்ச்சியில் குளிக்க முற்பட்ட போது நான்கு பேர் நீரில் மூழ்கி நேற்று காணாமல் போயிருந்தனர்.

அவர்களை தேடும் பணிகளில் பொலிஸார் மற்றும் மீட்பு குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.

அதில் ஒருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டிருந்தது.

இதையடுத்து இன்று மேலும் மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வனர்த்தத்தை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் ஊர்களில் வெள்ளை கொடிகள் பறக்கவிடப்பட்டு அனுதாபம் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதில் இறந்தவர்களின் விவரம் –

1. மொஹமட் லாபீர் முகம்மது சூரி (வயது 21) – கல்முனை.

2. அபூக்கர் ஹனாப் (வயது 21) – கல்முனை

3. முகம்மது நபீஸ் (வயது 20) – சாய்ந்தமருது.

4. அஹமட் லெப்பை மொஹமட் அப்சால் (வயது 21) – சாய்ந்தமருது.

இதுவரை குறித்த நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்று 17 பேர் உயிரிழந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version