உக்ரேனுக்கு 15.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குவதற்கு அதிகாரிகள் மட்டத்திலான இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதயம் தெரிவித்துள்ளது.

போர் நடைபெறும் நாடொன்றுக்கு ஐஎம்எவ் கடன் வழங்கவுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.

எதிர்வரும் வாரங்களில் இக்கடனுக்கு ஐஎம்எவ் பணிப்பாளர் சபை அங்கீகாரம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிக அதிகமாக நிச்சயமற்ற நிலையை எதிர்கொண்டுள்ள நாடுகளுக்கு கடன் வழங்குவதற்கு ஏற்ப சர்வதேச நாணய நிதியம் அண்மையில் தனது விதிகளில் மாற்றம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

ஜி7 மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து, பலமான நிதி உத்தரவாதங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த உக்ரேனுக்கு ஐஎம்எவ் கடன் வழங்குகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version