கொழும்பு பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் பதினேழு வயது சிறுமியுடன் காதல் தொடர்பில் இருந்த 23 வயது நபர், சிறுமிக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்ததாக கொழும்பு மத்திய பிரிவிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பல்வேறு குற்றச்சாட்டு பிரிவின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபருடன் விடுதி அறையில் இரவு தங்கியிருந்த 17 வயது சிறுமியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த சிறுமி கொழும்பின் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடசாலைக்கு சென்ற தனது மகள் வீடு திரும்பவில்லை என சிறுமியின் தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தனது மகளுக்கு சுமார் 6 வருடங்கள் ஒருவருடன் காதல் தொடர்பு இருந்ததாகவும் பலமுறை எச்சரித்தும் மகள் அந்த தொடர்பை நிறுத்தவில்லை எனவும் தாயார் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். சிறுமியுடன் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன் எந்த தொழிலும் இல்லாதவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version