கனடாவின் சனத்தொகை ஒரு வருட காலத்தில் சுமார் 10 லட்சத்தினால் அதிகரித்துள்ளது.

கடந்த ஜனவரி முதலாம் திகதி கனடாவின் சனத்தொகை 39,566,248  ஆக இருந்தது. அதற்கு ஒரு வருடத்துக்கு முன்னர் கனடாவின் சனத்தொகை 38,516,138 ஆக இருந்தது.

அதாவது, 12 மாத காலத்தில் கனடாவின் சனத்தொகை 1,050,110  பேரினால் அதிகரித்துள்ளது. இது ஒரு வருட காலத்தில் ஏற்பட்ட 2.7 சதவீதமான அதிகரிப்பாகும். கனடாவில் வரலாற்றில் 12 மாத காலத்தில் சனத் தொகை ஒரு மில்லியனுக்கும் கூடுதலான எண்ணிக்கையினால் அதிகரித்தமை இதுவே முதல் தடவை என கனேடிய புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

1957 ஆம் ஆண்டின் பின்னர் கனடாவில் ஒரு வருடத்தில் ஏற்பட்ட ஆகக்கூடுதலான சனத்தொகை வளர்ச்சி சதவீதம் இதுவாகும்.

தற்போதைய அதிகரிப்புக்கு அதிகமாக சர்வதேச குடிவரவே காரனம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கனடாவில் வேலையற்றோர் சதவீதம் தற்போது மிகக் குறைவாக (5 சதவீதம்) உள்ளது. அங்கு 7 பேரில் ஒருவர் 55 முதல் 64 வயதுக்குட்பட்டவராக உள்ளார். இந்நிலையில், 2015 ஆம் ஆண்டு அதிகாரத்தைக் கைப்பற்றிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசாங்கமானது வரவேற்கப்படும் புதிய குடிவரவாளர்கள் இலக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது.

கடந்த வருடம் 437,180 குடியேறிகள் கனடாவை சென்றடைந்தனர். இந்த எண்ணிக்கையை 2025 ஆம் ஆண் 500,000 ஆக அதிகிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதேவேளை, கடந்த வருடம் கனடாவில் நிரந்தரமற்ற வதிவிட அல்லது கல்வி கற்பதற்கான அனுமதி பெற்றவர்களின் எண்ணிக்கையும் 607,782 ஆக அதிகரித்திருந்தது. இதற்கு ரஷ்ய படையெடுப்பின் பின்னர் உக்ரேனிலிருந்து பெரும் எண்ணிக்கையானோர் வெளியேறியமையும் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version