ஜப்பானில் இருந்து வருகைதந்த சுற்றுலாப் பயணியான 52 வயதான பெண்ணின் மார்பகங்களை அழுத்தி பிடித்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் மரபுரிமை நகரத்தை பார்வையிடுவதற்காக வந்திருந்த ஜப்பான் பெண்ணுக்கு தேசிய மசாஜ் செய்வதாகக் கூறி அழைத்துச் சென்றே, அப்பெண்ணின் இரண்டு மார்பகங்களையும் அவர் அழுத்திப் பிடித்துள்ளார்.

வலி தாங்கமுடியாத அப்பெண், அவரது பிடியில் இருந்து தப்பிவந்து, தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தினார் என சுற்றுலாப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சுற்றுலா வழிகாட்டியாக தன்னை இனங்காட்டிக்கொண்டு இவ்வாறு செயற்பட்ட ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் மரபுரிமை நகரில் உள்ள பாறைக் குகைகளுக்குச் சென்ற 52 வயதான ஜப்பானியப் பெண்ணுக்கு உள்ளூர் ஆயுர்வேத மசாஜ் என்ற போர்வையில் உச்சந்தலையில் மசாஜ் செய்யும் போதே அப்பெண்ணின் இரண்டு மார்பகங்களையும் அழுத்திப் பிடித்துள்ளார்.

அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். சிகிச்சையாளர்.

கைது செய்யப்பட்டவர் அனுராதபுரம் சங்கமித்த மாவத்தையை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த வெளிநாட்டுப் பெண் கொழும்பு, தம்புள்ளை, கண்டி, அனுராதபுரம் ஆகிய இடங்களுக்குச் சென்றுவிட்டு கடந்த 22ஆம் திகதி அநுராதபுரத்திற்குத் திரும்பிய பின்னர் துவிச்சக்கர வண்டியில் பூஜா நகரில் பயணித்துக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version